• May 30 2026

விஜய்யின் பதவியேற்பு விழாவை விட விஷாலின் கோரிக்கைகளே அதிக வைரல்… ஏன் தெரியுமா?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஷால் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, ஒரு சாதாரண வாக்காளராக சில முக்கியமான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.


“C. ஜோசப் விஜய் என்னும் நான்…” என்று பதவிப்பிரமாணம் செய்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் புதிய அரசியல் பயணம் தற்போது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சூழலில், விஷால் வெளியிட்டுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் குறிப்பாக, பாதுகாப்பு பணிகளில் நீண்ட நேரம் நிற்கும் பெண் காவலர்களுக்காக நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டு வரும் சாலை சேதங்கள் மற்றும் மழைநீர் தேக்க பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

விஷாலின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் பாராட்டும் அதிகரித்து வருகிறது. அத்துடன், “வாழ்த்து மட்டும் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளையும் எடுத்துரைத்திருக்கிறார்.” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement