• May 10 2026

ஆளப்போறான் தமிழன்.. சும்மா அதிருதுல்ல..!! பிரேமலதா, சத்யராஜ் முதல் அமீர் வரை வாழ்த்து மழை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக இன்றைய தினம் பதவியேற்க உள்ளார் அதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகின்றன

விஜய் பதவி ஏற்பதை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் தொண்டர்கள் நடிகர்கள் பிரபலங்கள் என அனைவருமே மிகுந்த எதிர்பார்ப்போடு காணப்படுகின்றனர்.

அதே நேரத்தில்  விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதை காண்பதற்கு பலரும் நேரில் சென்றுள்ளனர். முதல் ஆளாக த்ரிஷா நேரு விளையாட்டு அரங்கிற்கு சென்ற காட்சியும் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

அதன்படி, நடிகர் சாந்தனு பாக்யராஜ் , “தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.


இயக்குநர் அமீர், “மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மதச்சார்பின்மை, சமூகநீதி… ஆளப்போறான் தமிழன்” என்று குறிப்பிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அன்பு தம்பி விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் சிறந்த நிர்வாகத்தை வழங்கி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ், முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விஜய்யின் தாயார் , “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பொற்கால ஆட்சியை விஜய் தர வேண்டும்” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாடகர் க்ரிஷ், “வெற்றி… வெற்றி… வெற்றி…” என வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement