• Jul 15 2026

விஜய்க்கு யார் பொண்டாட்டினு தெரியல..! திரிஷாவை கட்டியணைத்த தாயார்! கிளம்பிய பூகம்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற Vijay-யின் பதவியேற்பு விழா அரசியல் நிகழ்வை தாண்டி, திரையுலக நட்சத்திரங்களின் வருகையாலும் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக நடிகை த்ரிஷாவின் வருகை சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பதவியேற்பு விழாவிற்காக அரங்கில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், முக்கிய பிரபலங்களுக்கான இருக்கைகளும் தனியாக ஒதுக்கப்பட்டிருந்தன. முதல் வரிசையில் விஜயின் பெற்றோருக்கு அருகில் த்ரிஷா மற்றும் அவரது தாயாருக்கும் இடம் வழங்கப்பட்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் விழா அரங்கிற்குள் வந்த த்ரிஷா, விஜயின் தாயார் சோபாவை  கட்டியணைத்து நலம் விசாரித்த காட்சிகளும், அதன்பின் விழாவில் கலந்து கொண்டிருந்த திரையுலக நண்பர்களுடனும்  சந்தோசமாக  உரையாடிய காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே விஜயின் வெற்றியை வாழ்த்த நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்ற த்ரிஷா, தற்போது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.


ஒருபுறம், “விஜயின் அரசியல் பயணத்தில் த்ரிஷாவின் ஆதரவு தொடர்ந்து இருக்கிறது” என ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், மறுபுறம் சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், த்ரிஷா அரங்கிற்கு வருகை தந்த தருணம் முதல் விஜயின் குடும்பத்தினருடன் பேசிய காட்சிகள் வரை பல வீடியோக்கள் இணையத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன.

இதேவேளை, விஜயின் மனைவி சங்கீதா இருக்க வேண்டிய முதல் வரிசையில்  த்ரிஷாவுக்கு இடம் ஒதுக்கி இருப்பதும் பேசு பொருளாக மாறி உள்ளது..  ஏற்கனவே விஜய்க்கு யார் பொண்டாட்டினு தெரியல என்று பல விவாதங்கள் கிளம்பி வரும் நிலையில் தற்போது இதுவும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement