தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநர் ஆர்.என். அருளேக்கர் அனுமதி வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழக அரசியல் பரபரப்பான சூழலில், 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
மேலும், பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என தமிழக சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
அதேவேளை, நாளை மறுதினத்திற்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!