• Jul 14 2026

இது நட்பா.. இல்லை வேற ஏதாவதா..? விஜய்–த்ரிஷா குறித்து மீண்டும் வெடித்த சர்ச்சை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை த்ரிஷா தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே, தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்த போது, விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவும் வெற்றியை கொண்டாடவும் த்ரிஷா நேரடியாக அவரது நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றதாக கூறப்பட்டது. 

அந்த சம்பவமே அப்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. தற்போது மீண்டும் விஜய்யின் முக்கிய அரசியல் தருணத்தில் த்ரிஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் எழுந்துள்ளன.

சில விஜய் ரசிகர்கள், “விஜய்யின் அரசியல் பயணத்தில் இப்படியான விஷயங்கள் தேவையில்லை” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், “இந்த இடத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இருக்க வேண்டியது தான் சரி.” என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் த்ரிஷாவின் இந்த வருகை தற்போது இணையத்தில் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement