• May 10 2026

தமிழகத்தின் புதிய அத்தியாயமாக உருவெடுத்த விஜய்க்கு லிஸ்ட் போட்டு காத்திருக்கும் சவால்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் நாடகத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக பதவியேற்று புதிய அரசியல் வரலாற்றை எழுதியுள்ளார்.

2024-ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய விஜய், வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திரை உலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த அவர், இப்போது தமிழ்நாட்டின் நிர்வாகத் தலைவராக மாறியிருப்பது ரசிகர்களுக்கும் அரசியல் வட்டாரங்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

234 தொகுதிகளில் 233 இடங்களில் போட்டியிட்ட த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. முழு பெரும்பான்மை கிடைக்காதபோதிலும், பல தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருப்பது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கையை எட்ட விஜய்க்கு கடைசி நேரத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின. அதன் பின்னரே ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.


இதேவேளை, தேர்தல் காலத்தில் விஜய் பல்வேறு சர்ச்சைகளையும் சவால்களையும் சந்தித்திருந்தார். அவரது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” வெளியீட்டு சிக்கல், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம், சி.பி.ஐ. விசாரணை, குடும்ப பிரச்சினைகள் என பல தடைகளை கடந்து அவர் அரசியல் வெற்றியை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் பதவியேற்புடன் விஜய்க்கான உண்மையான சவால்கள் இனிமேல் தான் தொடங்குகின்றன என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.

அதன்படி வெளியான தகவல்களின் படி, தமிழகத்தின் கடன் சுமை தற்போது ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மகளிர் உரிமைத்தொகை உயர்வு, இலவச சிலிண்டர், திருமண நிதி, குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் புதிய அரசுக்கு உள்ளது.

மேலும், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் அரசியல் அழுத்தங்களையும், மத்திய அரசுடன் இருக்கும் உறவையும் சமநிலைப்படுத்த வேண்டிய நிலை விஜய்க்கு உருவாகியுள்ளது.

அதேநேரத்தில், த.வெ.க. சார்பில் வெற்றி பெற்ற பலருக்கும் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பது மற்றொரு சவாலாக பார்க்கப்படுகிறது.

எனினும், “மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், அதை நிரூபிப்பது விஜயின் கைகளில் உள்ளது” என்ற கருத்தே தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது.

Advertisement

Advertisement