தெலுங்கு சினிமாவின் பிரபல ஜோடியான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் உதய்பூரில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இவர்களுடைய திருமணம் இந்து முறை மட்டுமின்றி கொடவா பாரம்பரிய சடங்குகளுடனும் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.
ராஷ்மிகா மந்தனா 2016ல் கன்னடத்தில் அறிமுகமானவர். 2018ல் தெலுங்கில் சலோ படம் மூலம் கவனம் பெற்றார். விஜய் தேவரகொண்டா 2011ல் தெலுங்கில் அறிமுகமானவர். 2017ல் அர்ஜுன் ரெட்டி மூலம் மெகா ஸ்டாராக உயர்ந்தார்.

இருவரும் சேர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்துள்ளனர். தற்போது ரணபலி படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தன்னுடைய கணவர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் ராஷ்மிகா.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில்,"It's my man's birthday today and my day went like this….." என்று அன்புடன் பதிவிட்டுள்ளதோடு, ராஷ்மிகாவின் புகைப்படங்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Listen News!