• May 30 2026

வாழ்த்திற்கு பின்னால் உள்குத்து இருக்கிறதா? ஸ்டாலின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று சி. ஜோசப் விஜய் பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக் கொண்டனர். அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், நீண்ட காலமாக விஜயின் பெயரை நேரடியாக உச்சரிக்காமல் இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல்முறையாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்டாலின் தனது பதிவில், “நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், தற்போது தான் அரசு நிர்வாகத்தின் பொறுப்புகளை ஏற்றுள்ளீர்கள். அரசு செயல்பாடுகளின் நுணுக்கங்களை காலப்போக்கில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனும் உங்களுக்கு கிடைக்கும். வாக்களித்த மக்களோடு நானும் அதையே எதிர்பார்க்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து புதிய அரசுக்கும் முந்தைய நிர்வாகத்துக்கும் இடையிலான ஒரு நுட்பமான அரசியல் உரையாடலாக பார்க்கப்படுகிறது. சிலர் இதை நேர்மையான வாழ்த்தாக கருதினாலும், மற்றவர்கள் இதில் மறைமுக அரசியல் விமர்சனம் இருப்பதாகவும் விவாதித்து வருகின்றனர். தற்போது இந்த பதிவு அரசியல் சூழலில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement