• Jan 19 2025

3 லட்ச ரூபாய்.. யார் யார் என்பதை நான் தான் செலக்ட் செய்வேன்.. 3 படம் நடித்த நடிகை போட்ட கண்டிஷன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

இரண்டு அல்லது மூன்று படம் நடித்து விட்டாலே நடிகைகள் நிபந்தனைகள் போட தொடங்கி விடும் நிலையில் மூன்று படம் மட்டுமே நடித்த நடிகை அபர்ணதி தயாரிப்பாளர் இடம் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு அடுக்கடுக்காக நிபந்தனைகள் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீவெற்றி என்பவர் இயக்கத்தில் உருவான ’நாற்கர போர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அபர்ணதி நடித்துள்ளார். சதுரங்க விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகனாக லிங்கேஷ் என்பவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்ற போது இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் நாயகி அபர்ணதி இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் அபர்ணதி  இந்த விழாவுக்கு வருவதற்காக மூன்று லட்ச ரூபாய் தனியாக கொடுக்க வேண்டும் என்று சொன்னதாகவும், அது மட்டும் இன்றி விழா மேடையில் என்னுடன் யார் யார் உட்கார வேண்டும் என்பதை நான் தான் செலக்ட் செய்வேன் என்றும் சில நிபந்தனைகளை போட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து நீங்கள் விழாவுக்கே வரவேண்டாம் என்று தயாரிப்பாளர் கோபமாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து மன்னித்து விடுங்கள், நான் தெரியாமல் பேசி விட்டேன், விழாவுக்கு வருகிறேன் என்று சொன்னதாகவும் ஆனால் இன்று விழா ஆரம்பிக்கும் போது அவருக்கு போன் செய்தால் நான் வெளியூரில் இருக்கிறேன் என்னால் வர முடியாது என்று சொல்வதாகவும், நீங்கள் வரவே வேண்டாம் என்று தயாரிப்பாளர் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இது மாதிரி நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை என்றும் மற்ற தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நடிகைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த விழாவில் பேசினார். ’ஜெயில்’ ‘தேன்’ ’இறுகப்பற்று’ ஆகிய மூன்று படங்களில் நடித்த அபர்ணதி  நடித்த நான்காவது படம் தான் ’நாற்கர போர்’ என்பதும் 4 படங்களில் நடித்ததற்கே இவ்வளவு கண்டிஷன்கள் போட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement