• Jan 19 2025

என் கணவர் அளவுக்கு முடியாது ஆனால் நானும் செய்கிறேன் ! விவேக் மனைவி கொடுத்த தகவல் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்து மறைந்தாலும் இன்றளவிலும் போற்றப்படுபவர்கள் ஒருசிலர் மாத்திரமே ஆகும். அவ்வாறு இருக்கும் மறைந்த காமடி நடிகர் விவேக்கின் மனைவி சமீபத்தில் சில தகவல்கள் கொடுத்துள்ளார்.


விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 


இவ்வாறு இருக்கும் இவரது மனைவி அருட்செல்வி சமீபத்தில் கூறுகையில் " என் கணவர் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.அவர் மாதிரி என்னால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் நான்கு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் நேரம் ஒதுக்கி என்னால் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளை நட்டு வருகிறேன்" என கூறியுள்ளார். இதற்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement