சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரூமில் இருந்து மனோஜ் பாட்டு பாடிக் கொண்டிருக்க, ஸ்ருதி வந்து நீங்க ரொமான்ஸ் மூட்ல இருக்கீங்கன்னு தெரியும். ஆனால் தயவு செய்து பாடாதீங்க என்று சொல்லி செல்லுகின்றார்.
இதைத்தொடர்ந்து நீத்துவின் ரெஸ்டாரண்டில் சாப்பிட வந்த கஸ்டமர் சாப்பாடு சரியில்லை என்று சொல்லுகின்றார்கள். இதனால் நீத்து ரவி மீது கோபப்படுகின்றார். மேலும் ரவியிடம் இதைப் பற்றி பேச, ரவிக்கு கோவம் வருகிறது . இறுதியில் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டை இல்லாமல் ஆக்குவேன் என்று சபதம் எடுக்கிறார் நீத்து.
இன்னொரு பக்கம் வித்யாவுக்கு விருந்து கொடுப்பதற்கு முத்து மீனாவுடன் கதைத்துக்கொண்டிருக்கின்றார். இதைக் கேட்ட விஜயா இங்கு யாருக்கும் விருந்து கொடுக்கக் கூடாது என்று சொல்லியதோடு, அங்கு வந்த ரோகிணி அவங்க எங்களுக்கு தானே நெருக்கம், நீங்க எதற்கு விருந்து கொடுக்குறீங்க என்று இடையில் சத்தம் போடுகின்றனர்.

ஆனாலும் முத்து விஜயாவுடன் பேசியும் அவர் வித்யாவை வீட்டிற்கு அழைப்பதற்கு உடன்படவில்லை. இதனால் அவர்களை ஹோட்டலில் அழைத்து சாப்பாடு கொடுப்பதற்கு முத்து பிளான் பண்ணுகின்றார். இதனால் உடனே ரோகிணி வித்யாவுக்கு போன் பண்ணி நடந்தவற்றை சொல்லி அவர்கள் அழைக்கும் போது நீ போகக்கூடாது என்று சொல்லுகின்றார்.
இறுதியில் ரோகிணி க்ரிஷை பார்க்கப் போகின்றார். அங்கு அவர் தனது அப்பா பற்றி கேட்க, அவர் இறந்ததாக சொல்கின்றார் ரோகிணி. அதன் பின்பு க்ரிஷ் அப்படி என்றால் நான் மனோஜை அப்பாவாக சொல்லட்டுமா என்று கேட்கின்றார். மேலும் இந்த தீபாவளியை தன்னுடன் சேர்ந்து கொண்டாடுமாறு க்ரிஷும் அவருடைய அம்மாவும் கேட்கின்றனர்.
                             
                            
                            
                            
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!