• Apr 02 2025

மீனாவின் கவரிங் நகை பிரச்சினையில் போலீஸ் ஸ்டேஷன் சென்ற முத்து! அப்கம்மிங் இது தான்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின்  ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி  உள்ளது.

அதாவது தற்போது மீனாவின் நகைகள் கவரிங் என தெரிந்ததும் விஜயா அது மீனா வீட்டில் இருந்து வந்த நகைகள் தான். அப்படி என்றால் மீனாவுடைய அம்மாதான் நகையை மாற்றிக் கொடுத்ததாக மொத்த பழியையும் தூக்கி மீனாவின் குடும்பத்தின் மீது போட்டு விடுகின்றார்.

இதன் போது அங்கு இருந்த ஸ்ருதி போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் என சொல்ல, அங்கிருந்த விஜயாவும் மனோஜும் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது முத்து வெளியிட்ட அப்கம்மிங் சீரியலின் எபிசோட்டில், முத்து போலீசாருடன் நிற்பதாக போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதனால் இந்த கவரிங் பிரச்சனையில் போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்து இதன் மூலம் உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார் முத்து.

எனவே இவ்வாறு முத்து போலீசுக்கு சென்ற நிலையில், உண்மையான குற்றவாளி விஜயா, மனோஜ் என்பதை அறிந்து கொண்டாரா முத்து? இல்லை வழமை போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படுகின்றதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement