• Jul 22 2026

ஒன்னுக்கு இரண்டு புது போஸ்டர்களை வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு! அதகள மாஸ் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் தான் விடா முயற்சி. இந்த படம் குறித்தான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளன.

அசர்பைஜான் நாட்டில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி  இருந்தது.

குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் பை ஒன்றை தூக்கி நடந்து கொண்டு செல்வது போல் காட்டப்பட்டது. எனினும் அஜித் சாதாரணமாக எடுக்கும் புகைப்படமே மாஸாக இருக்கும்போது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் டல் அடித்ததாக சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.


இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின்  செகண்ட்  லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இவ்வாறு வெளியான விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் அஜித் கார் ஓட்டுவது போலவும், மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போலவும் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. தற்போது குறித்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement