• Jul 09 2025

அருணின் வார்த்தையால் மனமுடைந்த முத்து... கண்ணீர் விட்டுக் கதறிய மீனா..! டுடே எபிசொட்!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை அருணைப் பார்த்து நீ பொலீஸ் வேலையில இருக்கிற நீயே இப்புடி ஏமாத்தினா என்ன பண்ணுறது என்று கேட்கிறார். அதுக்கு அருண் ஆமா சார் இது 2வது கல்யாணம் தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து பாத்தியா அப்பா எவ்வளவு திமிரா பதில் சொல்லுறான். இவன் ஏற்கனவே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அந்தப் பொண்ணு இவனோட இருக்க முடியாமல் ஓடிப்போயிருக்கும் என்கிறார்.


இதனை அடுத்து அருண் முத்துவைப் பார்த்து நான் முதலாவது கல்யாணம் பண்ணது சீதாவை தான் என்று சொல்லுறார். மேலும் எனக்கும் சீதாவுக்கும் register marriage நடந்திட்டு என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனாவோட அம்மா இவர் சொல்லுறது உண்மையா என்று கேட்டு அழுது கொண்டிருக்கிறார். பின் முத்து மாமா சொல்லுறதை தான் கேட்பேன் என்று சொன்ன இப்ப நல்ல முடிவெடுத்திருக்க என்கிறார். விஜயாவும் இப்ப பாத்தியா சீதாவோட ஒழுக்கத்தை என்று சொல்லுறார்.

பின் அருணைப் பார்த்து முத்து எதையோ பேசி சீதாவ யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிட்ட என்று சொல்லுறார். அதுக்கு அருணோட friend அருண் ஒன்னும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கல மீனா தான் சாட்ஷி கையெழுத்து வைச்சவங்க என்று சொல்லுறார். பின் மீனாவும் என்னை மன்னிச்சிருங்க நான் தான் கையெழுத்து போட்டேன் என்கிறார். 


அதைக் கேட்ட முத்து அங்கிருந்து கோபமாக கிளம்புறார். பின் மீனாவோட அம்மா சீதாவையும் மீனாவையும் அடிக்கிறார். இதனை அடுத்து முத்து வேதனையில குடிக்கிறார். பின் சீதாவோட அம்மா மீனாவைப் பார்த்து மாப்பிள்ளையை பற்றி கொஞ்சம் ஜோசிச்சியா என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து மீனாவும் சீதாவும் முத்துவைக் கூப்பிடுறதுக்காக மண்டபத்தில இருந்து கிளம்புறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement