தமிழ் சினிமா உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு முக்கிய குற்றச்சாட்டு வழக்கில், பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் வைத்திருத்தல் மற்றும் பாவனை செய்ததாக அவர் மீது வங்கி பதிவு மற்றும் மெசேஜ் ஆதாரங்களுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய தகவல்களின் அடிப்படையில் கைது மேற்கொள்ளப்பட்டது.
சென்னை காவல் துறையினரின் கூற்றுப்படி, கடந்த மே மாதம் நுங்கம்பாக்கத்தில் நடந்த ஒரு பிரபல டிஸ்கோவில் ஏற்பட்ட சண்டை வழியாக இந்த போதைப்பொருள் வட்டாரம் மீண்டும் வெளிப்படையாக பரிசீலிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது ஒரு பெரிய அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் குறித்துள்ளனர்.
விசாரணையின் போது, நடிகர் ஸ்ரீகாந்திடம் இருந்து குறைந்த அளவிலான கோகெயின் வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அவரது ரத்த பரிசோதனை மூலம், அவர் அந்த நேரத்தில் போதைப் பாதிப்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை விசாரணைகளின் ஒரு பகுதியாக ஸ்ரீகாந்தின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அவரது மொபைல் மெசேஜ்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில், போதைப் பொருள் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்புடைய பண பரிமாற்றங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடன், அவரது தனிப்பட்ட பிரத்தியேக தகவல்கள் மற்றும் தொடர்புகளில் பல சினிமா துறையை சேர்ந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு மேலும் பரபரப்பாக மாறியது, நடிகர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த தகவலால். அவர் நேர்காணல் ஒன்றில், இந்த போதைப்பொருள் வட்டாரத்தில் பல நடிகைகளும் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.அவர் கூறியபோது, பாடல் வரிகளை மேற்கோளாகக் கூறி சில நடிகைகளை சுட்டிக்காட்டினார். அவரது விளக்கத்தில், :"பம்பர கண்ணாலே பச்சை குத்தி வந்தாலே…", "இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா…", "முத்த மழை இங்கு கொட்டி தீராதோ…", "கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை…", "வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…" ,"கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…" எனும் பாடல் வரிகளின் மூலம் நான்கு பிரபல நடிகைகளை குறித்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, “ஆண்களை போல இவர்களையும் பரிசோதனைக்கு அழைப்பார்களா?” என்ற கேள்விக்கு அவர் “ஆமா” என உறுதியாக பதிலளித்துள்ளார்.
தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள், அவர்களது பெயர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், விசாரணை களம் விரிவாகி வருவதால், பலர் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள், போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை மீறுபவர்களைப் பற்றி நேரில் புகார் அளிக்குமாறு பொலிஸார் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!