• Jan 19 2025

’முத்தழகு’ சீரியல் நடிகரின் காதலி ஒரு பல் டாக்டரா? எப்போது திருமணம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’முத்தழகு’ சீரியலின் ஹீரோ ஒரு பல் டாக்டரை காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலி புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’முத்தழகு’ சீரியலில் பூமிநாதன் என்ற ஹீரோ கேரக்டரில் ஆசிஷ் சக்கரவர்த்தி நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. இவர் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ஹார்ட் இமோஜியையும் பதிவு செய்துள்ள நிலையில் இவரைத்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என ரசிகர்கள் கேள்விக்கு அவர் ’ஆம் ’என்று பதில் அளித்துள்ளார்.



மேலும் ஒரு மனிதனின் மூளை இறந்த பிறகும் ஏழு நிமிடங்கள் செயல்படும், என்னுடைய கடைசி ஏழு நிமிடங்கள் ’அவள்’ என்றும் குறிப்பிட்டு தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆசிஷ் காதலிக்கும் பெண்ணின் பெயர் காயத்ரி என்றும் அவர் ஒரு பல் டாக்டர் என்றும் அவரும் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்ததிலிருந்து இந்த காதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஷிஷ் மற்றும் காயத்ரி காதல் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியும் என்றும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ’முத்தழகு’ சீரியலை அடுத்து இன்னொரு சீரியலில் நடிக்க ஆசிஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement