பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அடுத்து ஒரு மாசான திரைப்படம் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இவர் பல படங்களை இயக்கி இருந்தாலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்து வசூலில் சாதனை படைத்தது. இவர் அடுத்து ஒரு பான் World படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில், மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் ஈடுபட்டு உள்ளாராம். இந்த படம் பான் World படம் என்பதால் உலக சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், தமிழ் துறையில் இருந்து விக்ரம், மலையாளத்தில் இருந்து மோகன் லால் மற்றும் பிருத்விராஜ், தெலுங்கு துறையில் இருந்து நாகர்ஜுனா மற்றும் பாலிவுட்டில் இருந்து தீபிகா படுகோனே, நடிகர் கிரிஸ் ஹெமஸ்வொர்த் மற்றும் ஒரு வெளிநாட்டு நடிகையை தேர்வு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் தொடர்பான உறுதியான அப்டேட் இனி வரும் காலங்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
                             
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!