• Sep 06 2026

G.O.A.T படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சி.. தளபதி விஜய் சொன்ன அதிரடி விமர்சனம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள திரைப்படம் G.O.A.T.  இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்துள்ளனர்.


சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.G.O.A.T திரைப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் மூலம் நடித்துள்ளார் என தகவல் தொடர்ந்து வெளிவந்தது. சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கேப்டன் இல்லத்திற்கு சென்று பிரேமலதா, விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனை சந்தித்தனர். 


இதன்மூலம் G.O.A.T படத்தில் கேப்டன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது கேப்டனின் இரு மகன்களுடனும் நடிகர் விஜய் மிகவும் ஜாலியாக பேசினாராம்.  G.O.A.T படத்தில் விஜயகாந்த் அவர்கள் வரும் காட்சி பிரமாண்டமாக இருக்கிறது என்றும் பிரேமலதா விஜயகாந்திடம் கூறியுள்ளாராம் விஜய். G.O.A.T திரைப்படத்தில் சுமார் 3.5 நிமிடங்கள் விஜயகாந்த் AI மூலம் தோன்றுவார் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement