பிசாசு ,துப்பறிவாளன் ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சமீபத்தில் மேடையில் மிகவும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகித்து பேசியமையினால் அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.இவரது இயக்கத்தில் தயாராகியுள்ள பிசாசு 2 திரைப்படம் இரண்டு வருடங்களாக வெளியாகாமல் தள்ளி போயுள்ளது.
இந்நிலையில் தற்போது மிஷ்கின் மேடை ஒன்றில் ஆண்ட்ரியா குறித்து பேசியுள்ளார்.மற்றும் இவர் ஆபாசமாக படம் எடுக்கிறார் எனும் கேள்விக்கு "நான் படங்களை நேசிப்பவன் இல்லையா படங்களையும் பிராணிகளையும் மனித இனங்களையும் இயற்கையையும் நேசிப்பவன் ஜயா நான் நான் ஆபாசமாக படம் எடுக்கிறேனா.?பிசாசு 2 இல் என் குழந்தை ஆண்ட்ரியாவிடம் கதை சொன்னேன் ஒரு தாய் தாய்க்கு பேய் புடிச்சிருக்கு அந்த பேய் நிறைய விரசமா இருக்கிறா அதற்க்கு நிர்வாண காட்சிகள் தேவை நடிக்கமுடியுமா ? என கேட்டேன் அதற்கு அவ நடிக்கிறேன் என சொன்னா ; பெண் துணை இயக்குநர் வைத்து போட்டோ சூட் சேய்தோம் பின்னர் நான் உன்னோட நிர்வாணத்தை காட்டி போஸ்டர் படத்தில கட்டினேன்னா நான் இப் படத்தை ஒரு இலக்கியமா பார்க்கிறேன் ஆனால் அனைவரும் அவ்வாறு இல்லை இந்த காட்சி வேணாம் என கூறிவிட்டு வந்தேன்" என நா தழுதழுக்க பேசியுள்ளார்.
Listen News!