தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக காணப்படுபவர் தான் மணிகண்டன். இவர் தெரிவு செய்யும் கதைகள் தரமானதாகவும் தனித்துவமாகவும் காணப்படும். இதனால் அடுத்தடுத்த உயரத்திற்கு சென்று கொண்டுள்ளார்.
இவருடைய நடிப்பில் வெளியான சிலுக்குப்பட்டி, குட் நைட், ஜெய் பீம், லவ்வர் என பல வெற்றி படங்களை கொடுத்தவர், இறுதியில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியானது.
குடும்பஸ்தன் திரைப்படத்தை ராஜேஸ்வரர் காளி சாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா என்ற புது நடிகை இணைந்துள்ளார். இந்த படம் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் பேமிலி படமாக வெற்றி நடை போட்டு வருகின்றது.
d_i_a
குடும்பஸ்தன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் தொடர்ச்சியாகவே திரையரங்குகள் ஹவுஸ் புல்லாக காணப்படுகின்றன. இதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலுலம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளன. முதல் நாளில் 1.4 கோடிகளை வசூலித்துள்ளது.
இந்த நிலையில், குடும்பஸ்தன் படத்திற்கான இரண்டாவது நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி குடும்பஸ்தன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் மட்டும் சுமார் 2.8 கோடிஎன கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் மொத்தமாக 4.2 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டி வருகின்றது. இன்றைய தினமும் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
Listen News!