• Oct 04 2024

கோடிகளை வாரிக் குவிக்கும் மெய்யழகன்... இரண்டு நாட்களில் வசூலித்த மொத்த கலெக்சன்?

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி - அரவிந்த்சாமி கூட்டணியில் 96 படத்தினை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மெய்யழகன். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்துள்ளது. இது கார்த்தியின் 27ஆவது படமாகும்.

மெய்யழகன் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தற்போது வரையில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகிறது மெய்யழகன் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக கார்த்தி விளங்கினாலும் ஒரு கிராண்ட் ஓப்பனிங்கிற்கான கதாநாயகனாக இன்னும் உருவெடுக்கவில்லை. அதற்கு காரணம் அவரின் கதை தேர்வு காணப்படுகின்றது. கார்த்திக்கு சூப்பர் ஹிட் ஆன படம் என்றால் சர்தாரை குறிப்பிடலாம். இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது.


பொன்னியின் செல்வன் மற்றும் ஜப்பான் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது வெளியான மெய்யழகன் திரைப்படம் கார்த்திக்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களைக் கடந்த நிலையில் அதன் வசூல் விபரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். மேலும் இந்த படத்தில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் தியேட்டரில் அலை மோதி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement