• Jan 18 2025

மாயா அப்பவே என் காதுல போட்டாங்க.. இன்னொரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா...! கேம் சேஞ்சர் விஜய் வர்மா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். 

இந்த நிகழ்ச்சியில் சீசன் 7 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் விஜய் வர்மா. எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியிருந்து வெளியேறினார்.

தற்போது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால் உள்ளே உள்ள 14 பேரும் போட்டியை தொடரலாம் இல்லை என்றால் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மூவருக்கு இடம் விட்டு விலக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் வர்மா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


'பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னப் பேசுறதுன்னு தெரியாம கோபமா பேசின சில வார்த்தைகள் தான் எனக்கு பின் விளைவை ஏற்படுத்தியிருக்கு. அந்த வீட்டுல பிரஷர்ல பேசின விஷயங்கள் தானே தவிர மனசுல இருந்து வேணும்னே எந்த வார்த்தையையும் விடல. பிரதீப்கிட்ட வெளியில என் நண்பர்கள் இருக்காங்கன்னு சொன்னதுகூட தெரியாம  விளையாட்டா  பேசினதுதான். விஷ்ணு அதை பெருசாக்கிட்டாரு. அந்த விஷயம் பெருசாகிடுச்சு.


பிக் பாஸ் போகிறதுக்கு முன்னாடியே மாயாவை எனக்குத் தெரியும். நான் பிக் பாஸ் வீட்டுல இருந்து வெளிய போரப்போ 'வைல்டு கார்டுன்னு' மாயா என் காதுல சொன்னாங்க.  ஆனாலும், மூனாவது வாரமே எவிக்ட் ஆவேன்னு கொஞ்சமும் நினைக்கல. அதை ஏத்துக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்ப வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய சப்போர்ட் வருது. எனக்கு இன்னொரு சான்ஸ் கிடைச்சதுன்னா நாம போய் கேம் சேஞ்சர் ஆன ஒரு ஆளாக இருக்கலாம்னு நினைச்சிருக்கேன். இன்னொரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அதை சரியா பயன்படுத்திப்பேன்' எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement