• Sep 10 2024

மீனா, ஸ்ருதியை திட்டிய விஜய்யா! விஜய்யாவிற்கு பேய் பயத்தை காட்டிய ஸ்ருதி! பயத்தில் நடுக்கும் மனோஜ்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாள் எபிசோட்டில் மீனா சீத்தாவை பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு செல்கிறார் மீனா. டீ குடித்துக்கொண்டே சீத்தா ரோகிணி விஷயம் பற்றி வீட்டுல பேசினீர்களா என்று கேட்க அதற்கு மீனா ஆமா அதுனால வீட்டுல பிரச்சினை ஆகிருச்சு என்று நடந்த விடயத்தை கூறுகிறார்.


இத கேட்ட சீத்தா சுருத்தி டப்பிக் பேசுவாங்கனு பார்த்தா சரியான ரேடியோவா இருக்காங்க என்று கூறுகிறார். மீனா இனிமே ரோகிணி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று அறிவுரை கூறிவிட்டு செல்கிறார். அப்போதுஹாஸ்ப்பிட்டல் hr சீத்தாவிடம் இந்த ஆஸ்ப்பிட்டேலோட கிளைன்ட் டிடைல்ஸ் நீங்க ஏன் விசாரிக்கிறீங்க என்று கேட்கிறார். சீத்தா ரோகிணி என்னோட ரிலேஷன் தான் அதன் கேட்டேன் என்று சொல்கிறார்.


அதற்கு hr அது வீட்டுல வச்சிக்கோங்க கிளைன்ட் டிடைல்ஸ் வெளிய சொல்ல கூடாதுனு தெரியாதா? என்று திட்டுகிறார். ரோகிணி இனி வரமாட்டன் என்று சொல்லிட்டாங்க இனி உனக்கு இங்க வேலை இல்லனு சொல்லிறார். அப்போது சீத்தா தனதுக்குடும்ப நிலைமை குறித்து கூறி கெஞ்சுகிறார். இதனால் சரி பரவாயில்ல வேல செய் இனி இப்படி நடந்த வேலைய விட்டு தூக்கிருவன் என்று கூறுகிறார். 


மீனாவை பார்ப்பதற்காக மீனாவிற்குத்தெரிந்தவர்கள் வந்து கல்யாண ஓடர் வந்து இருக்கு நீயும் வந்த சீக்கிரம் கட்டிடலாம் முத்துக்கிட்ட சொல்லிட்டு வா என்று கூறுகிறார்கள். அப்போது முத்து கால் பண்ணி தான் வெள்ளூர் போகப்போகிறேன் சவாரி என்று சொல்ல மீனா அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறாள். முத்து போதும் மீனா இத்தன கேள்வி கேக்குற போதும்னு சொல்கிறார்.  


சுருதி ரவிக்கு கால் பண்ணி சீக்கிரம் வா வெளிய போகலாம் என்று சொல்கிறார். ரவி வாரத்துக்கு லேட்டாகும் நீ சாப்பிட்டு தூங்கு என்று சொல்கிறார். கோபமடைந்த சுருதி நா நல்ல சாப்பிட்டு தூங்கிருவான் கதவை திறக்கமாட்டான் என்று சொல்கிறார். பின்னர் ரவியும் வர்லேதாகவும் முத்துவம் சவாரி சென்று விட்டார் என்பதால் மீனா மற்றும் சுருதி நல்ல பேய் படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.


மீனா பயந்து கத்துவதை கேட்டு எழுந்த விஜய்யா என்ன நாடு ராத்திரில சத்தம் போடுறீங்க என்று கேட்கிறார். அதற்கு சுருதி பேய் படம் பாக்குறம் ஆன்டி உங்களுக்கு பேய் பயம் இல்லையா என்று கேட்கிறார். அதற்கு விஜய்யா எனக்கு என்னமா பயம் நீங்கதான் பயப்பிடுவீங்க பேய் வந்தா ஓங்கி ஒரே அடி பேயே சுருண்டு விழுந்துரும் என்று மீனாவையும் சுருதியையும் திட்டிவிட்டு செல்கிறார். 


ஆண்டிக்கு பேய் பயத்தை  நான் காட்டுறேன் என்று சுருதி பிளான் போடுகிறார். ஸ்பீக்கரை எடுத்து வந்து பேயவிட சத்தத்துக்கு தான் பயம் வரும் இப்ப பாருங்க என்று பேய் ஓசைகளை போடுகிறார். விஜய்யா என்ன சத்தம் கேக்குது என்று பயப்பிடுகிறார். அண்ணாமலை விஜய்யா சிரிக்காம தூங்கு என்று கூறுகிறார். நான் இல்லங்க வேற யாரோ சிரிக்கிறாங்க என்று பயத்துடன் கூறுகிறார். 


இதனை கேட்ட மனோஜும் பயந்து எழும்பி ரோகிணியை எழுப்புகிறார். அப்போது விஜய்யா என்று சுருதி குரல் மாற்றி கூப்பிடுகிறார். விஜய்யா யாரு யாரு என்று கேட்ட இது ஏன் வீடு என்று சொல்கிறார். மனோஜ் இதுக்கு முன்னாடி இந்த வீட்டில் தூக்குமாட்டி செத்து இருப்பாங்க போலயே என்று பயப்பிடுகிறார். இதோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement