கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.
சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.
முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பதால் இதற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த ஆண்டு தமிழில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் இங்கு சக்கை போடு போட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வசூலை வாரி குவித்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த திரைப்படம் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 50 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளதாம்.
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்கின்ற சாதனையும் மஞ்சுமெல் பாய்ஸ் படைத்துள்ளது.
அது மட்டும் இன்றி அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் பிரேமம் படம் முதலிடத்தில் பிடித்திருந்த நிலையில், தற்போது அதை முறையடித்துள்ளது மஞ்சுமெல் பாய்ஸ்.
Listen News!