• Jan 19 2025

ரொம்ப வருத்தமா இருக்குது.. மனச தேத்திகிட்டு இருக்கேன்.. சீரியல் நடிகை மகாலட்சுமி சோக வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி தனக்கு ரொம்ப வருத்தமாக இருப்பதாகவும் தான் மனதை தேற்றிக் கொண்டிருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அந்த சர்ச்சையை கண்டுகொள்ளாமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கோவில் கோவிலாக சுற்றுனர் என்பதும் அவ்வப்போது இருவரும் ரொமான்ஸாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான ’அன்பே வா’ என்ற சீரியலில் மகாலட்சுமி நடித்து கொண்டிருந்த நிலையில் இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த சீரியல் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. ’அன்பே வா’ சீரியல் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி இது குறித்து கூறிய போது ’இந்த சீரியல் முடிகிறது என்ற தகவல் எங்களுக்கு மிகவும் சோகமாக இருக்கிறது என்றும் இருந்தாலும் எந்த ஒரு சீரியல் என்றாலும் அதற்கு ஒரு முடிவு என்று என்பதால் நாங்கள் மனதை தேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் கண்டிப்பாக இன்னொரு சீரியலில் உங்கள் எல்லாரையும் நான் சந்திப்பேன்’ என்றும் அவர் தெரிவித்தார்

’நான் இந்த சீரியலுக்கு இடையில் தான் வந்தேன், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன், வாசுகி என்ற கேரக்டர் என் மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு கேரக்டராக இருந்தது. என்னுடைய கேரக்டருக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்பது மிகப் பெரிய விஷயம், இதேபோல் இன்னொரு கேரக்டர் எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை, ஆனாலும் அடுத்த சீரியலில் உங்களை நான் சந்திக்கிறேன்’ என்று மகாலட்சுமி அந்த வீடியோவில் கூறியுள்ளார் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement