• Jan 19 2025

கோர்ட்டில் மேக்னா கொடுத்த வாக்குமூலம்! அரெஸ்ட் ஆன கிரிமினல்ஸ்! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், சரஸ்வதியை விடுவிப்பதற்காக மேக்னாவின் ஆடியோ ஆதாரத்தை கோர்ட்டில் காட்டவும், அது எல்லாம் டெக்னாலஜில வாய்ஸ் மாத்தி பேசலாம் என ஆதாரம் எல்லாத்தையும் தவிடு பொடி ஆக்குகிறார் எதிர் தரப்பு வக்கீல்.

எனினும், அந்த ஆதாரம் உண்மையா? இல்லையா? என்று உறுதி செய்யுமாறு நீதிபதி கட்டளை இடுகிறார். இதை தொடர்ந்து வெளியே வந்த சரஸ்வதிக்கு ஜூஸ் கொடுக்கவும், நான் விடுதலையாகாமல் எதுவும் குடிக்க மாட்டேன் என்று சரஸ் சொல்ல, தமிழ் அவரை சமாதானப்படுத்தி ஜூஸ் கொடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆடியோ ஆதாரத்தை சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என சொல்லவும், இறுதியாக தமிழ் இன்னும் ஒரு ஆதாரம் இருக்கு என எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன்படி வாக்குமூலம் வழங்குவதற்கு வந்த கண் தெரியாத ஐயாவின் பையில் இருந்து மேக்னாவின் போனை எடுக்கிறார் தமிழ். மேலும் அதில் மேக்னா பேசிய ஆதாரம் இருக்குது, இத சாட்சியாக எடுக்கலாம் தானே என அதை ஜர்ச் இடம் கொடுக்கிறார்.

குறித்த வீடியோவில், என் சொத்துக்காக ஆசைப்பட்டு மாமாவும் அவருடைய பையனும் தான் என்னை துரத்திக் கொண்டு வாராங்க.. நான் உயிரோடு இருப்பேனா இல்லையா என்று தெரியாது, சரஸ்வதியும் தமிழும் ரொம்ப நல்லவங்க.. எல்லாத்துக்கும் காரணம் எங்க மாமா தான்,  அப்படி என்று மேக்னா பேசி இருக்கிற ஆதாரத்தை ஜட்ஜ் பார்க்கிறார்.

இதை அடுத்து உண்மையை ஒத்துக் கொள்ளுமாறு மேக்னாவின் மாமாவிடம் இறுதியாக கேட்க, அவர்கள் இருவரும் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.

இதை தொடர்ந்து, சரஸ்வதிக்கு விடுதலை கிடைக்கிறது. வெளியில் வந்த சரஸ்வதி தமிழை கட்டிப்பிடித்து சந்தோஷத்தில் அழுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement