• Jan 19 2025

அவ்வளவு சீக்கிரமா உள்ளே விட்ருவோமா? சூர்யாவை திரையுலகில் இருந்து வெளியேற்ற சதித்திட்டமா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா வரும் ஆண்டுகளில் பாலிவுட்டில் சில படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அங்குள்ள சில பிரபலங்கள் இணைந்து சூர்யாவை பாலிவுட் திரை உலகிற்குள் நுழைய விடக்கூடாது என சதி திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

பாலிவுட் திரை உலகை பொறுத்தவரை நெப்போட்டிசம் அதிகம் காணப்படும் என்பதும் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே அங்கு வாய்ப்புகள் பெற முடியும் என்ற நிலை இருப்பதாக குற்றம் காட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தனது குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் தங்கி இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் திரை உலகில் கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’சூரரை போற்று’ இந்தி ரீமேக்கில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் அக்ஷய்குமார் உடன் நடித்து வரும் நிலையில் ’கர்ணா’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து மேலும் சில பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளை அவர் பெற முயற்சித்து வரும் நிலையில் ’இவரை இப்படியே விட்டால், பாலிவுட்டிலும் நிரந்தரமாக கால் பதித்து விடுவார் என்று அங்குள்ள சில பிரபல நடிகர்கள் அச்சப்பட்டுள்ளனர்.



எனவே பாலிவுட்டில் சூர்யாவை நுழைய விடக்கூடாது என முன்னணி நடிகர்கள் சிலர் சேர்ந்து சதி செய்வதாக கூறப்படும் நிலையில் அந்த சதியை உடைத்து பாலிவுட்டில் சூர்யா சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement