• Dec 07 2024

விஜயாவுக்கு அடுத்தடுத்து நிகழும் அசம்பாவிதங்கள்.. மனோஜால் குடும்பத்துக்கு நேர்ந்த ஆபத்து

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை கரெக்ட் பண்ணுவதற்காக முத்துவிடம் ஐடியா கேட்கிறார். முத்துவும் அந்த பொண்ண பார்க்கும்போது பெயர் கேட்டத்துக்கு சாரி.. நானே உங்களுக்கு ஒரு பெயர் வச்சிருக்கேன் என்று சொல்லி கதைக்குமாறு ஐடியா கொடுத்து அனுப்புகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டில் மனோஜ் விஜயாவை அழைத்து உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்க, அவர் உன்னை தான் என்று சொல்லுகின்றார். அதன் பிறகு கடையில் முட்டை இருந்த விஷயத்தையும் ஜோசியரை பார்த்த விஷயத்தையும் அவர் செய்ய சொன்ன பரிகாரத்தையும் பற்றி மனோஜ் சொல்லுகின்றார்.

இதைக் கேட்ட விஜயா தன்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது அதனால் நான் இந்த பரிகாரத்தை பண்ண மாட்டேன் என்று சொல்கின்றார். பரிகாரத்தை செய்யவில்லை என்றால் உங்களுடைய உயிருக்கும் ஆபத்து என்றும் மனோஜ்  சொல்லுகின்றார். ஆனாலும் பரவாயில்லை என்று விஜயா வெளியே போக, அங்கு பேன் கீழே விழுகின்றது. இதனால் எல்லாரும் திகைத்துப் போய் நிற்கின்றார்கள். 


அதன் பின்பு மோட்டாரில் தண்ணி வரவில்லை என்று எல்லோரும் குடத்துடன் தண்ணீர் எடுக்க செல்கின்றனர். அந்த நேரத்தில் மோட்டார் பழுது பார்ப்பவர் வந்து செய்ய வேண்டியவை எல்லாவற்றையும் செய்துவிட்டு யாரும் சுவிட்சை போட வேண்டாம் என்று முத்துவிடம் சொல்லிச் செல்கின்றார். 

இறுதியாக மனோஜ் வந்து தெரியாமல் சுவிட்சை போட்டு விடுகின்றார். இதனால் கரண்ட் வந்துவிட்டது என்று விஜய் ஃபேனை போட அவருக்கு கரண்ட் அடிக்கின்றது. அங்கு வந்த பார்வதி விஜயாவை தொட அவருக்கும் கரண்ட் பாஸ் ஆகிறது. அப்படியே ரோகினி, ஸ்ருதி, மனோஜ், ரவி என எல்லோரும் கரண்ட் ஷாக் ஆகி நிற்கின்றார்கள். இதனை மீனா பார்க்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement