• Jan 18 2025

மனைவி மறைந்து 6மாதத்தில்... தோழியை மணந்த மதுரை முத்து... சர்ச்சைகளுக்கு கொடுத்த பதிலடி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து அதன் மூலமாக பிரபலமானவர் தான் மதுரை முத்து. மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னால் முடிந்த வரை புதிய மீம்களை தனது புகைப்படங்களுடன் எடிட் செய்து வைத்து அதன் வாயிலாக இணையவாசிகளையும் சிரிக்க வைத்து வருகிறார்.


அது மட்டுமல்லாது 'கலக்கப் போவது யாரு மற்றும் அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனங்களில்  நீங்காத இடத்தினையும் பிடித்திருக்கின்றார். இவ்வாறாக பலரையும் சிரிக்க வைத்து வருகின்ற மதுரை முத்துவின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து நோக்கின் இவர் லேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.


லேகா ஏற்கெனவே வேறொருவருடன் திருமணமான நிலையில் ஒரு குழந்தை பிறந்தவுடன் கணவர் இவரைக் கைவிட்டு விட்டார். இதன் பின்னர் இவரை மதுரை முத்து தன்னுடைய வீட்டில் உள்ளவர்களின் பேச்சினையும் மீறித் திருமணம் செய்துக் கொண்டார். 

லேகா-மதுரைமுத்து தம்பதியினரின் சிறந்த நல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக யாழினி, மந்தரா என்ற இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் யாருமே எதிர்பாராத நேரத்தில் 2016ஆம் ஆண்டு லேகா கார் விபத்து ஒன்றில் சிக்கி  உயிர் துறந்தார்.


தன்னுடைய முதல் மனைவி இறந்து 6 மாதத்தில் மதுரை முத்து தன் முதல் மனைவியின் நண்பியான நீந்து என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். மனைவி மறைந்து 6மாதத்தில் இன்னொரு திருமணம் செய்த மதுரை முத்து குறித்து பல சர்ச்சைக் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தன.

இது குறித்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை முத்து ஒரு விடயத்தினைக் கூறியிருந்தார். அதாவது தனக்கு இரண்டு பெண் குழந்தைகளும் வயதான பெற்றோரும் இருப்பதாகவும், அவர்களை நல்ல படியாக பார்த்துக் கொள்வதற்கு ஒரு துணை வேண்டும், அதன் காரணமாகத் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் எனக் கூறியிருந்தார்.

இருப்பினும் மதுரை முத்துவின் திருமண விடயமானது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement