• Jan 18 2025

விஜய்யின் தங்கையாக நடித்து... காணாமல் போன நடிகை மல்லிகா... தற்போதைய நிலை என்ன தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ஆட்டோகிராப், திருப்பாச்சி போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை மல்லிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்து பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அந்த வகையில் இவர் குறித்த தெரியாத பல விடயங்கள் குறித்துப் பாப்போம்.

இவரின் நிஜப் பெயர் ரீஜா ஜோன்சன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் 1985 ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி திரிசூட்டில் பிறந்தார். 

இவரின் முதல் திரைப்படமும் கேரளத் திரைப்படம் தான். அதன் மூலமாகத் தான சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2002-ஆம் ஆண்டு 'நிலுக்குது' என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக ஒரு ஹீரோயினாக அறிமுகமானார். 


இதன் பின்னர் தான் தமிழில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சப்போர்டிங் க்ரேக்டருக்கான் பிலிம் பேர் விருதினையும் இவர் வென்றிருக்கின்றார். அத்தோடு 'மகாநடிகன்' திரைப்படத்திலும் சிறிய கரெக்டரில் நடித்திருப்பார். 

இதனை தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 2005-ஆம் ஆண்டு வெளியான 'திருப்பாச்சி' திரைப்படம். இதில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்து அசத்தியிருந்தார்.

இப்படத்தின் உடைய வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களிலும் தங்கச்சியாகவோ அல்லது துணை நடிகையாகவோ நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து குவிந்தன. அந்தவகையில் 'குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்' போன்ற பல படங்களைக் குறிப்பிட முடியும்.


இருப்பினும் இவர் அதிகளவில் மலையாளப்  படங்களில் தான் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது 'அஞ்சலி, திருவிளையாடல்' என்ற சீரியலிலும் நடித்திருக்கின்றார். 

இந்நிலையில் தற்போது நடிகை மல்லிகா அவர்கள் திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் சினிமாத்துறையை விட்டு காணாமலே போய் விட்டார். இருப்பினும் தனது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றார்.

Advertisement

Advertisement