• Jun 04 2026

மதுரை முத்து மகள்களின் பூப்புனித நீராட்டு விழா கோலாகலம்.! நேரில் வாழ்த்திய ராமராஜன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான மதுரை முத்து தனது இரண்டு மகள்களுக்கும் பூப்புனித நீராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். 

மூத்த மகள் மித்ரா மற்றும் இளைய மகள் யாழினி ஸ்ரீ ஆகியோருக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விழாவில் குதிரை பூட்டிய தேரில் மகள்களை அமர வைத்து மதுரை முத்து தானே சாரதியாக தேரை ஓட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த நிலையில், மதுரை முத்து வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு நடிகர் ராமராஜன் வந்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

மேலும், இந்த விழா தொடர்பான வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement