• Apr 14 2026

விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சை: ஜேசன் சஞ்சய் செய்தியாளர் சந்திப்பு நடத்துவாரா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்திலிருந்து தனியாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், நடிகை திரிஷாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இதற்கிடையில், விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியாகின. தனது மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனை அவர் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தின.


இதனால் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துகள் சங்கீதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், இதுகுறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க அவர் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தனது தாயை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் செய்தியாளர் சந்திப்பு நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement