• Jan 18 2025

காதல் நடிகருடன், கல்யாணம் தொழிலதிபருடனா?- நடிகை அஞ்சலி சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் அஞ்சலி. விளம்பர படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.2007 ம் ஆண்டு தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார் அஞ்சலி. இருந்தாலும் 2010 ல் அவர் நடித்த அங்காடி தெரு படம் தான் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

அங்காடி தெரு படத்திற்காக அஞ்சலிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர், விகடன், ஜெயா டிவி விருதும், நார்வே தமிழ் திரைப்பட திருவிழாவிலும் விருது கிடைத்தது.2011 ல் இவர் நடித்த எங்கேயும் எப்போதும் படமும் பல விருதுகளை அஞ்சலிக்கு பெற்றுத் தந்தது. 


தொடர்ந்து மங்காத்தா, கலகலப்பு, இறைவி என தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் கேம்சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அஞ்சலி தனது திருமண வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர், நான் முதலில் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது, பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்.


நடிகை என்பதால் அவர்களை பற்றி வாய்க்கு வந்தபடி எழுதுகிறார்கள் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement