• Jan 19 2025

விஜயா பற்றி கழுவி ஊற்றிய அன்பு மகன் மனோஜ்.. முத்து செய்த தில்லாலங்கடி வேலை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் புதிதாக பிசினஸ் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கும் மனோஜை முத்து தனது வீட்டாருடன் கடை ஒன்றுக்கு கூட்டிப் போகின்றார். அங்கு சென்ற மனோஜ், கடையை பார்க்காமல் அங்கிருக்கும் முதலாளியின் கதிரையில் அமருகிறார்.

வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகினியும் புதிதாக தொடங்கவுள்ள பிஸினஸ்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தபோது, மனோஜ் உங்க அப்பாட பெயரை வைக்கலாமென்று ரோகினிக்கு சொல்ல, அவர் உங்களோட அம்மா பெயர் வைக்கலாமென்று சொல்லுகிறார்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்து வந்து நான் சொல்ற பெயரை வை என்று சொல்ல, என்ன பெயர் என்று மனோஜ் கேட்க, விஜயா என்று சொல்லுகிறார் முத்து. அதற்கு நாங்க என்ன பெயர் வச்சா உனக்கு என்ன, நாங்க ஜோசிச்சு பெயர் வைப்போம் என்று சொல்ல, நீ அம்மாவோட பெயரைத்தான் வைக்கிறாய் என்று முத்து சொல்லுகிறார்.

அதற்கு மனோஜ் எனக்கும் அம்மா மேல பாசம் இருக்கு தான் என்று சொல்ல, முத்து போனில் ரெக்கார்ட் பண்ணிய வாய்ஸ் மெசேஜை போட்டு காட்டுகிறார்.

அதில் மனோஜ், விஜயா என்ற பெயர் ராசி இல்ல, பார்லருக்கு விஜயா என்று பெயர் வச்சோம் அதுவும் இல்லாம போயிட்டு. முத்து மீனாட  பூக்கடைக்கு விஜயா என்று பெயர் வச்சான். அதுவும் இல்லாம போயிட்டு அதனால விஜயா என்ற பெயர் ராசி இல்லை என்று சொல்லுகிறார்.

இதை கேட்டு மனோஜ், ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். எனவே தற்போது முத்து பதிவு செய்திருக்கும் இந்த வாய்ஸ் ரெக்கோட்டை வீட்டாருக்கு போட்டு காட்டுவாரா? இல்லை முத்துவின் பேச்சைக் கேட்டு மனோஜ் அம்மாவின் பெயரை தான்  ஆரம்பிக்கும் பிசினஸுக்கு வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement