• Jan 19 2025

ஜி.வி பிரகாஷ் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்கிறாரா? அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் தான் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானதை தொடர்ந்து நடிகராகவும் அவதாரமெடுத்து வெற்றி நடை போட்டு வருகின்றார்.

தற்போது ஜிவி பிரகாஷ் இசையில் தங்கலான் படம் மற்றும் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வாடிவாசல், வீர தீர சூரன் ஆகிய முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வழியாக வைரலாகி வருகின்றன.


அதாவது கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் விரைவில் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாகவும், இன்று அல்லது நாளையோ அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளி விடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருமே ஒரே பள்ளியில் படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்பி என்ற மகளும் உள்ளார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெறவுள்ளார்கள் என்ற விஷயம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement