• Nov 25 2025

"கூலி" படம் நல்லா ஓடணும் என்று.. கோயில் கோயிலா ஏறி இறங்கிய லோகேஷ்..! வைரலான போட்டோஸ்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டையும், தென்னிந்திய சினிமாவையும் கொண்டாட வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது தனது அடுத்த எதிர்பார்ப்புடன் கூடிய திரைப்படமான கூலியின் ரிலீஸிற்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள இப்படம், வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.


இந்த சூழ்நிலையில், திரைப்பட ரிலீஸை முன்னிட்டு, இயக்குநர் லோகேஷ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான கவனத்தை ஈர்த்துள்ளார் .

"கூலி" திரைப்படம், தமிழ் சினிமாவின் புதிய பரிமாணங்களை காட்டும் ஒரு mass action entertainer எனக் கூறப்படுகிறது. இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் முதல் படம் என்பதாலேயே ரசிகர்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்" போன்ற பாக்ஸ்ஆஃபிஸ் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ், இப்போது "கூலி" மூலமாக ரஜினியின் ஸ்டைலுக்கும், தன் இயக்க நேர்த்திக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை உருவாக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement