பாலிவுட்டின் முன்னணி நடிகை கஜோல், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது ஏற்பட்ட ஒரு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கஜோல் சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முழுவதும் கஜோல் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலேயே பேசியிருந்தார்.
நிகழ்ச்சி நடுவே நிரூபர் ஒருவர், கஜோலிடம், ஹிந்தியில் பேசுமாறு கேட்டிருந்தார். அதற்கு கஜோல் "ஹிந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும்." என்று கூறினார்.
கஜோலின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. "நடிகை ஒருவர் இந்திய சினிமாவில் முக்கியமான பங்கு வகிக்கும்போது, ஹிந்தியில் பேச மறுப்பது சரியா?" என பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
Listen News!