• Jul 17 2025

ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்..! சூர்யா வில்லனா ? இயக்குநர் யார் தெரியுமா..?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது rj பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய "கங்குவா " பட தோல்வியின் பின்னர் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு படம் நடித்து தருவதாக கூறியிருந்தார்.


இந்த நிலையில் சூர்யா அடுத்து சண் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் முதலே இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆகவே இந்த படத்தில் தான் சூர்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.


இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் இந்த படத்தில் சூர்யா வில்லனாக நடிக்கலாம் என வதந்திகள் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement