• Jan 28 2026

லாக் செய்த விடாமுயற்சி! ஸ்கெட்ச் போடும் உதயநிதி! மோதப்போகும் படங்கள்....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பொங்கல், தீபாவளி புதுவருடம் வந்தாலே புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதற்கு அடித்துக்கொள்வார்கள். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருப்பார்கள். அதுவே தனக்கு பிடித்த நடிகர் படம் ரிலீஸ் என்றால் திரையரங்கம் அதிரும் அளவுக்கு ஆட்டம் பாட்டம் என கொண்டாடி தீர்ப்பார்கள். 


இந்த விடையம் வழமையாக நடந்து வருகிறது முன்னர் ரஜனி, கமல், அஜித் ,விஜய், சூரிய ,தனுஷ் என போட்டி போட்டு கொண்டாடிய காலம் போக தற்போது எல்லா இயக்குனர்களும் ரிஸ்க் எடுக்க தயராகி விட்டார்கள். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகும் போதும் தனது படத்தினை ரிலீஸ் செய்கிறார்கள். 


இந்நிலையில் இந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் ரிலீசுக்காக சில படங்கள் போட்டிபோட்டு கொண்டு இருக்கிறார்கள். பொங்கல் ரிலீசுக்கு விடாமுயச்சி முன்னரே திகதி லோக் செய்துள்ளது. இதனிடையே மத்த திரைப்படங்கள் தொடர்பாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


டிசம்பர் மாத இறுதியில்  ஜெயம் ரவி டிசம்பர் 20ஆம் தேதி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள “காதலிக்க நேரமில்லை” படத்தின் மூலம் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளார்.  வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் அதே நாளில் தான் வெளி வருகிறது. இதுபோக தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்த படமும் ரிலீஸ்க்கும் டிசம்பர் 20ஆம் தேதி தான் நாள் குறித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement