• Jan 19 2025

போதும் டார்ச்சர்.. இனி நிம்மதியா வாழலாம்.. விஜய்யை போலவே அஜித்தும் சினிமாவை விட்டு போகிறாரா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

லைக்கா நிறுவனம் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவில் இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆனால் அஜித், லைக்கா நிறுவனத்தின் படத்தை ஏன் ஒப்புக் கொண்டோம் என்று புலம்பும் அளவுக்கு லைக்கா நிறுவனம் நடந்து கொண்டதாக தெரிகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்தவித அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுக்காமல் இருப்பது, படப்பிடிப்பையும் ஒழுங்காக நடத்தாமல் இருப்பது, திடீர் திடீர் என படப்பிடிப்பை ரத்து செய்வது ஆகியவை அஜித்தை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எப்படியாவது இந்த படத்தை முடித்துவிட்டு இனி லைக்கா பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அஜித் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சமீபத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அனைவரிடம் கூறிவிட்டு திடீர் என சில காரணங்களால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் இன்னும் ஒரு மாதம் கழித்து தான் படப்பிடிப்பு நடைபெறும் என்று லைக்கா தரப்பிலிருந்து கூறியிருப்பது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



இதனால் வெறுத்துப்போன அஜித் இனி சினிமா பக்கமே வேண்டாம் என்றும், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை முடித்துவிட்டு பேசாமல் துபாயில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே தனது போட்டியாளர் விஜய் இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் சின்னச்சின்ன பசங்களுடன் தான் மோத வேண்டாம் என்று முடிவெடுத்த அஜித் கூடிய விரைவில் திரை உலகில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் விரைவில் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய போவதாகவும், தனக்கு பிடித்த நிம்மதியான வாழ்க்கையை தொடர இருப்பதாகவும் குறிப்பாக அவர் துபாயில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement