• Sep 19 2026

இந்தியாவே கொண்டாடும் A. R. ரஹ்மானுக்கு அமெரிக்காவில் இந்த நிலையா.? லீக்கான போட்டோஸ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய இசைத்துறையின் பெருமையாக திகழும் A. R. ரஹ்மான், அமெரிக்காவின் வாஷிங்டன், நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற Academy of Achievement விழாவில் 'Golden Plate' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 

உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் இந்த விருது, ரஹ்மானின் இசைப் பயணத்திற்கும் உலகளாவிய தாக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.


இசையின் மூலம் இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திய ரஹ்மான், தனது வாழ்நாள் சாதனைகளுக்காக இந்த விருதை பெற்றுக் கொண்டது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதைப் பெற்றுக்கொண்ட தருணத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக இசை ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள அவரது சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய இசையின் பெருமையை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் பறைசாற்றியுள்ள ரஹ்மானின் இந்த வெற்றி, ரசிகர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement