நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக தான் ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் நோய்க்காக தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவுகளால் என் உடலில் சோர்வு மற்றும் சில உடல் மாற்றங்கள் வெளிப்படையாக தெரிகின்றன.
பலரும் என்னுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அதற்கான முக்கிய காரணம் நான் எடுத்துவரும் மருத்துவ சிகிச்சை தான்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த சிகிச்சை எனது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது. சில பக்கவிளைவுகள் இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். உடல்நலமே முதன்மை என்பதால் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடித்து வருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் இந்த நேர்மையான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது உடல்நிலை குறித்து எந்த தயக்கமும் இல்லாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட அவரின் மனத்துணிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!