• May 23 2026

'DC' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழும் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகை சஞ்சனா முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க பழிவாங்கும் கதை அம்சத்தைக் கொண்டதாக உருவாகியுள்ளது. இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களும் பழிவாங்கலை மையமாகக் கொண்டவை என்பதால், ‘டிசி’ திரைப்படமும் அதே வரிசையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘டிசி’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement