• Jun 14 2026

இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவி தான்.! பிரபல பாலிவுட் நடிகர் ஓபன்டாக்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சாய் பல்லவி, பாலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராக உள்ளார். அமீர் கான் மகன் ஜூனைத் கான் உடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘ஏக் தீன்’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. அமீர் கான் Productions தயாரித்துள்ள இப்படம், சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகமாக இருப்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் இந்த படம் அவருக்கு ஹிந்தி திரையுலகில் வலுவான அறிமுகமாக அமையும் என நம்புகின்றனர்.

இந்நிலையில், பட விழாவில் பேசும்போது அமீர் கான், “நமது நாட்டில் தற்போது இருக்கும் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்” என்று மேடையில் பாராட்டியுள்ளார். இந்த வார்த்தைகள் சாய் பல்லவிக்கு பெரும் உணர்ச்சி தருணமாக அமைந்தது. அவரது திறமைக்கு இவ்வளவு பெரிய அளவில் கிடைத்த அங்கீகாரம், ரசிகர்களிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஏக் தீன்’ திரைப்படம் வெளியான பின், சாய் பல்லவியின் பாலிவுட் பயணம் எப்படி அமையும் என்பதைக் காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement