• Jul 05 2026

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமானது இவர்களால் தானா? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் தனது ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கவனம் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அவர் திரைப்படத்தில் அறிமுகமாகிய பின்னணி குறித்து கவிஞர் யுகபாரதி சமீபத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


யுகபாரதி கூறியதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயனைப் பார்த்து, அவர் திறமையானவர் என்று தானும் இசையமைப்பாளர் டி. இமானும் இணைந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். 

அந்த நேரத்தில் இயக்குநர் எழில் அவர்களை சந்திக்க வந்தபோது, “சிவகார்த்திகேயன் என்ற ஒரு இளைஞர் நல்லா பண்ணுறான்., அவரை உங்கள் படத்தில் நடிக்க வைக்கலாம்” என்று பரிந்துரைத்ததாக கூறினார்.

இதற்கு எழில் உடனே சம்மதித்து, “அந்தப் பையன் பண்ணுறது எனக்கும் பிடிக்கும், கண்டிப்பாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்” என்று கூறியதாகவும் யுகபாரதி நினைவுகூர்ந்துள்ளார். அதன் விளைவாக, சிவகார்த்திகேயன் ‘மனம் கொத்தி பறவை’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இந்த தகவலை பகிர்ந்த யுகபாரதி, “சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு நானும் இமானும் ஒரு காரணம் என்பது சிவகார்த்திகேயனுக்கே தெரியுமா என தெரியவில்லை” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement