தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான லெஜெண்ட் சரவணன், தனது இரண்டாவது படமான ‘லீடர்’ மூலம் வலுவான கம்பேக் கொடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அந்தப் படத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதபோதிலும், புதிய முயற்சியுடன் மீண்டும் திரும்பியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘லீடர்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். மேலும் பயல் ராஜ்புட் , ஆண்ட்ரியா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பு படத்தின் வசூலையும் உயர்த்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘லீடர்’ திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே வேகத்தில் படம் தொடர்ந்து ஓடினால், வரும் நாட்களில் மேலும் அதிக வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Listen News!