• Apr 28 2026

மனோஜை தேடிவந்த அமெரிக்கா பெண்ணு.! ரவியை புருஷனாக சேர்த்த நீத்து.? மீனா கொடுத்த ஐடியா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த ஸ்வேதா நற்செய்தி ஒன்றை சொல்கிறார். அதன்படி தனக்குத் தெரிந்த சொந்தக்காரர் ஒருவரின் மகள் அமெரிக்காவில் உள்ளார். அவர் ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டார். ஆனால் தற்போது மனோஜ் பற்றி சொன்னதும், அவர் மனோஜ் மீது ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.

அந்த நேரத்தில் விஜயா அவருடைய சொத்துகளைப் பற்றி விசாரிக்க, அவர்களுக்கு சொந்தமாகவே ஹெலிகாப்டர் இருப்பதாக சொல்ல, விஜயா வாய் அடைத்துப் போகிறார். இதனால் அந்த சம்பந்தத்தை எப்படியாவது பேசி முடிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்.

இன்னொரு பக்கம், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு சென்ற மீனா, மனோஜுக்கு நிச்சயதார்த்தம் பார்க்க நீங்களும் கட்டாயம் வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் நீத்து தன்னுடைய ரவி பொக்கேஸ் கம்பெனியின் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்புகிறார். ஆனால் அதில் நீத்துரவி என ரவியின் பெயரையும் சேர்த்து அழைப்பிதழில் அச்சிட்டுள்ளார்.


இதனால் ஸ்ருதி கோபப்பட, அந்த நேரத்தில் மீனா, "நீங்கள் அவரின் கடை திறப்பு விழா நடக்கும்போது இங்கே இருக்க வேண்டாம், எங்காவது ரவியை அழைத்துக்கொண்டு பயணம் செல்லுங்கள்" என்று யோசனை கொடுக்கிறார். அதுதான் சரி என்று ஸ்ருதியும் நம்புகிறார்.

இறுதியில், மேள தளத்துடன் முத்துவும் மீனாவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் செல்கின்றனர். இதனைப் பார்த்த சிந்தாமணி கோபமடைகிறார். இதுவே இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement