• Jun 11 2026

10 லட்சம் கேட்டு அதிர்ச்சி கொடுத்த வக்கீல்.! அண்ணாமலையின் கண்டிஷன்? அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மீனா சுயநலவாதியாக இருப்பதாக விஜயா திட்டுகிறார். இதைக் கேட்ட அண்ணாமலை, “அவங்க இந்த வீட்டை மீட்பதற்காக தினமும் போராடுறாங்க. இதையெல்லாம் உன்னுடைய மகன் மனோஜிடம் சொல்லு” என்று விஜயாவின் வாயை அடைக்கிறார்.

அந்த நேரத்தில், முத்து “மீனா சங்கத் தலைவி பதவியை ராஜினாமா செய்யத்தான் இருந்தார். நான் தான் வேண்டாம் என்று சொன்னேன்” என கூறுகிறார். அதற்கு அண்ணாமலையும், “பதவியை ராஜினாமா செய்து வீட்டை மீட்க வேண்டாம்” என்று கூறினார்.

அதேபோல், ரவியிடம் “வாசுதேவனின் பணத்தையும் வாங்க வேண்டாம். என்ன நடந்தாலும் என்னுடைய மூன்று பிள்ளைகளும் என்னுடன் தான் இருக்க வேண்டும். யாரிடமும் விலை போகக் கூடாது” என அண்ணாமலை கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மீனாவின் அம்மா விஜயாவுக்கு மட்டன் கறி வாங்குமாறு சத்யாவிடம் கூறுகிறார். அதற்கு அவர் “என்னிடம் பணம் இல்லை” என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதை விஜயா கேட்டுக் கொண்டிருந்தாலும், “எனக்காக யாரும் கடன் வாங்க வேண்டாம். எனக்கு மட்டன் சாப்பிட ஆசை இல்லை. வழக்கம்போல சாம்பார் வைத்தாலே போதும்” என்று கூறுகிறார்.


பின்னர் அண்ணாமலை வீட்டிற்கு வரும்போது விஜயா சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். மேலும், “சாப்பாடு சுவையாக இல்லையென்றாலும் அன்புடன் பரிமாறுவது தான் முக்கியம்” என்று கூறுகிறார்.

அதன் பின், சத்யாவும் அவருடைய அம்மாவும் வீட்டிற்கு வரும்போது, “கொஞ்சம் போன இடத்தில் நேரம்போய் விட்டது ” என்று கூறுகின்றனர். இதைக் கேட்ட விஜயா, “வேலை பார்க்கத்தானே போனீர்கள், பரவாயில்லை” என்று சொல்கிறார். இதனால் சத்யா அதிர்ச்சி அடைகிறார். மேலும், விஜயா சமைத்த உணவை அனைவரும் பாராட்டி சாப்பிட, விஜயா மனம் உருகுகிறார்.

மற்றொரு பக்கம், வீட்டை மீட்பதற்காக முத்துவும் மீனாவும் வக்கீலை சந்திக்கின்றனர். அப்போது அவர், “வீட்டை மீட்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால் அதற்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும்” என்று கூறுகிறார்.

இறுதியில், ரோகிணி மனோஜின் கடைக்கு வருவதை சிசிடிவி கேமராவில் பார்த்த அண்ணாமலையும் விஜயாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த நேரத்தில் விஜயா ஸ்பீக்கரை ஆன் செய்து, “முகத்துக்கு பவுடர் போட்டு எந்த ஆம்பளையை மயக்கலாம் என்று திரிகிறாயா? உனக்கு வேறு வேலை இல்லையா?” என்று கஸ்டமர்கள் முன்னிலையில் ரோகிணியை திட்டுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement