• Aug 05 2026

CM ஜோசப் விஜய் புகைப்படங்களுக்கு டிமாண்ட் இல்லையா? புதுக்கோட்டையில் நடந்த சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய் பதவி ஏற்ற நாளிலிருந்து மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றார் இவருடைய சேவைகள் அதிரடி திட்டங்கள் என்பன சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து, அவரது அதிகாரப்பூர்வ புகைப்படங்களுக்கு மாநிலம் முழுவதும் அதிகளவில் தேவை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுக்கோட்டையில் உள்ள ஒரு புகைப்பட லேமினேஷன் கடைக்கு ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள், ரசிகர் மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் முதலமைச்சரின் புகைப்படங்களை ஆர்வத்துடன் ஆர்டர் செய்து வருகின்றனர்.


இதனால் அந்த கடையின் ஊழியர்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படங்களை பிரிண்ட் செய்வது, லேமினேஷன் செய்வது மற்றும் பிரேம் அமைப்பது போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த புகைப்படங்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் டிமாண்ட் தற்போது புதுக்கோட்டை பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement