• May 21 2024

வாத்தி படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்- இன்றைய தினம் செம சர்ப்ரைஸ் இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான தனுஷ் நடிப்பில் தற்பொழுது நானே வருவேன் திருச்சிற்றம்பலம் வாத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இவரது நடிப்பில் இறுதியாக தி கிரே மான் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள முக்கிய திரைப்படம் தான் வாத்தி. இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வெங்கி இயக்கி வருகின்றார்.இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

இப்படத்தின் சில புகைப்படங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும், First லுக் போஸ்டருக்காக தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில், இன்று தனுஷின் பிறந்தநாள் பரிசாக வாத்தி படத்தின் First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.மேலும், நாளை மாலை இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தின் டீசரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement